கொழும்பு 15, மட்டக்குளிய சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள புதிய 3 மாடிக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க மேல் மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் இசுரு தேவப்பிரிய திறந்து வைத்தார்.
நிகழ்வில் முஜிபுர் ரஹ்மான், ரிசாத் பதியுதீன் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் உட்பட கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
-S. Cassim
-S. Cassim
No comments:
Post a Comment