பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இயங்கும் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலால் 46 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கும் இந்தியா அதற்குப் பதிலடியாக இன்று பாக் எல்லைக்குள் விமானத் தாக்குதல் நடாத்தியதாக தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும், அதனை நிராகரித்த பாகிஸ்தான், பாகிஸ்தானின் துரித நடவடிக்கையால் இந்திய விமானங்கள் அவசர அவசரமாக திருப்பிச் செல்ல நேரிட்டதாகவும் அவசரத்தில் திறந்த வெளி மற்றும் கானகப்பகுதிகளில் குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூடிய உயர்மட்ட குழு, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் தேவையேற்படின் தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் மீது குண்டு வீசப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருவதுடன் அரசியல்வாதிகள் அதனைக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment