பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான், பாக் நிர்வாகத்தினை வெகுவாக கவர்ந்துள்ளார்.
குறிப்பாக, சவுதி அரேபியாவில் பணியாற்றும் 2.5 மில்லியன் பாகிஸ்தானியர்களை சொந்த மக்களாக நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என இம்ரான் கான் விடுத்த வேண்டுகோளுக்கு, அதை விட, நான் சவுதிக்கான பாகிஸ்தானின் தூதர் என நினைத்துக் கொள்ளுங்கள் என மறுமொழியளித்து இம்ரான் கான் உட்பட பாக். நிர்வாகத்தின் பாராட்டையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார் முஹம்மத் பின் சல்மான்.
தீவிர நிதிப் பற்றாக்குறையில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவுதியிடமிருந்து பல உதவிகள் மற்றும் முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Crown Prince Mohammad bin Salman won the hearts of the people of Pakistan when he said “consider me Pakistan's ambassador to Saudi Arabia" in response to my asking him to treat the 2.5 mn Pakistani's working in KSA as his own.#CrownPrinceinPakistan pic.twitter.com/Xr0E2EWKrK— Imran Khan (@ImranKhanPTI) February 18, 2019
No comments:
Post a Comment