வென்னப்புவ பகுதியில் பிரபல போதைப் பொருள் வியாபாரியும் பாதாள உலக பேர்வழியுமான ஒலு மராவும் 11 சகாக்களும் பொலிசாரின் விசேட நடவடிக்கையொன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் ஏலவே பல தடவைகள் போதைப் பொருள் விற்பனை செய்ததன் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு இடங்களிலிருந்து போதைப் பொருளைப் பெற்று லுனுவில - சிறிகம்பல பகுதிகளில் விற்பனை செய்து வரும் வழக்கமுள்ள குறித்த நபர், நேற்றைய தினமும் அவ்வாறே போதைப் பொருள் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் கைதின் போது 2.3 கிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment