தான் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதியென பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் தலைமையிலான குழுவொன்று அவரை அத்துல்கோட்டே, வியத்மக காரியாலயத்தில் வைத்து இரு தினங்கள் முன்னால் சந்தித்துள்ள நிலையிலேயே கோத்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கும் முஸ்லிம்களுக்கும் நீண்ட கால நல்லுறவு இருப்பதாகவும் இராணுவத்தில் தனது நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் முஸ்லிம் உயரதிகாரியொருவரேயெனவும் கோட்டாபே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்து.
தகவல்: எம்.என்.எம்.அப்ராஸ்
தகவல்: எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment