ஊடகங்களில் தான் கண்டறிந்த உத்தேச தேசிய அரச திட்டத்தினை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போதான உரையில் வைத்தே அவர் இவ்வாற தெரிவித்திருந்த அதேவேளை, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும் அமைச்சர்களுக்கான வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியாகவே இது தென்படுவதாகவும் இது வரை தான் கண்டறிந்த வகையில் அதனை தான் எதிர்ப்பதாகவும் மைத்ரி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment