மாவட்ட - பிரதேச - மாகாண பிரிவுகளை மீளாய்வு செய்ய வேண்டும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 February 2019

மாவட்ட - பிரதேச - மாகாண பிரிவுகளை மீளாய்வு செய்ய வேண்டும்: ரணில்


இலங்கையின் மாவட்ட, பிரதேச மற்றும் மாகாண பிரிவுகளை மீளாய்வு செய்து ஐக்கிய இலங்கையெனும் ஒரே நிலைப்பாட்டில் இயங்க வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இவ்வாறான பிரிவுகளுக்கூடாக மத்திய நிர்வாகத்தினை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாகவும் 60 களில் உருவான மாவட்டங்கள் இன்று இத்தனை கூறுகளாக மாறியுள்ளமை காலாவதியாகி விட்டதா என சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாம் இன்றைய காலத்தை விட எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே இவ்விடயங்களை முன் வைப்பதாகவும் ரணில் மேலும் தெரிவிக்கின்றமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் திருப்திப்படுத்த வட - கிழக்கை இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment