இனவாதிகளால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட தம்புள்ள பள்ளிவாசலுக்கான காணி ஒதுக்கீடுட்டில் நிலவும் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே தனது அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இப்பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் கபீர் ஹாஷிம், ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லின் கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் தென் கொழும்பில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன் மஹரகமயில் சாஹிரா கனிஷ்ட பிரிவு மற்றும் விளையாட்டரங்கு நிர்மாணிக்கவும் பிரதமர் அனுமதியளித்துள்ளார்.
ஏலவே முஸ்லிம் பெண்கள் பாடசாலையொன்றை நிறுவ முஜிபுர் ரஹ்மான் முயற்சியில் பிரதமர் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment