மாளிகாவத்தை பாஜியென அறியப்பட்ட, முன்னாள் பாதாள உலக பேர்வழியின் மனைவியும் தற்போது டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபான இம்ரானின் துணைவியுமென கருதப்படும் கிரான்ட்பாஸ் குடு சூட்டியை கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகாவே நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மதுஷோடு டுபாயில் வைத்து கஞ்சிபான இம்ரானும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தயவில் போதைப் பொருள் வர்த்தகம் செய்து வந்த குடு சூட்டியின் இடத்தைப் பிடிப்பதற்காகவே ஜீபும்பா எனும் புனைப் பெயர் கொண்டு அறியப்படும் குறித்த நபர் இத்துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுஷ், இம்ரான், அங்கொட லொக்கா, அஸ்மி உட்பட முக்கிய பாதாள உலக பேர்வழிகளுக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை டுபாயில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment