திருமலை மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் 28ம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கால கட்டத்தில் இதற்கு முன்னரான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே மீண்டும் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் தீர்மானின்கப்படவுள்ளதாகவும் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கிண்ணியாவில் மணல் அகழ்வினைத் தடுக்க கடற்படையினர் முயன்ற நிலையில் இரு இளைஞர்கள் ஆற்றில் குதித்து உயிரிழந்திருந்தமையும் பதற்ற நிலை தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment