கார் இறக்குமதி மோசடி: படத்தில் உள்ளவர் பற்றி தகவல் கோரும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 February 2019

கார் இறக்குமதி மோசடி: படத்தில் உள்ளவர் பற்றி தகவல் கோரும் பொலிஸ்!



வெளிநாட்டு கார் இறக்குமதி செய்து தருவதாக நாட்டில் பல இடங்களில் உள்ளோரை ஏமாற்றிப் பணம் பறித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் குறித்த நபர் பற்றி பொது மக்களிடம் தகவல் உதவி கோருகின்றனர்.


சமன் குமார ஜயசிங்க என அறியப்படும் தங்கல்லயைச் சேர்ந்த நபரே இவ்வாறு தேடப்படுகிறார்.

குறித்த நபர், பல இடங்களில் வாகனம் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி பணம் பறித்து வந்துள்ளதாகவும் தகவல் அறிந்தவர்கள் 0112679593, 0112673571 அல்லது 0112673954 ஆகிய இலக்கங்கள் ஊடாக பொலிசாரைத் தொடர்பு கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment