கல்முனையில் சுதந்திர தின விழா - sonakar.com

Post Top Ad

Monday, 4 February 2019

கல்முனையில் சுதந்திர தின விழா


இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 71வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலக ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அவர்களின் தலைமையில் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில்  நடைபெற்றது.



இதில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கீப் அவர்களும் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரகள் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச செயல்க உயர் அதிகாரிகள் மத பெரியவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள்,மத்ரஸா மாணவர்களின் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. 

-எம்.என்.எம்.அப்ராஸ் / அகமட் எஸ். முகைடீன்

No comments:

Post a Comment