71 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசல் நிர்வாக சபை, கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபை இணைந்து நடத்திய தேசிய சுதந்திர தின வைபவம் பள்ளிவாசலின் நிர்வாக சபைத் தலைவரும் கண்டி மாநகர சபை பிரதி மேயர் இலாஹி ஆப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட கண்டி மாநகர சபை முதல்வர் கேசர சேனாநாயக உத்தியோகபூர்வமாக கொடியை ஏற்றி வைத்தார்
இதில் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுவர் நெரந்திர சிங், பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் அப்சல் மரைக்கார், கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே. எம். எச். ஏ. சித்தீக், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக ஜெய்னுலாப்தீன் லாபிர், எம். டி முத்தலிப், ஹிதாயத் சத்தார், உலமாக்கள் வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
-இக்பால் அலி
No comments:
Post a Comment