ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பில் சந்திக்க வர வேண்டாம்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 February 2019

ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பில் சந்திக்க வர வேண்டாம்: ஹிஸ்புல்லா


நாளை ( 20.02.2019) புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற இருக்கின்ற நிலையில் சகல ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாகவும் ,பதவி உயர்வு தொடர்பாகவும் யாரும் ஆளுநரை சந்திக்க வரவேண்டாம் என ஆளுநர் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
இவ்வாறான இடமாற்றங்கள் பதவியுயர்வுகளுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 



கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்த சகல பதவியுர்வுகள் ஆசிரிய இடமாற்றங்கள் சகலதும் முடியுமானளவு விரைவாக ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்து ,ஒவ்வொரு விடயம் தொடர்பாக திணைக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே அதற்கிடையில் வீணாக ஆளுநர் செயலகத்திற்கு வந்து உங்களது நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து வீணடிக்க வேண்டாம். ஏப்ரல் 15 முதல் இடமாற்றங்கள் ,பதவியுயர்வுகள் இடம் பெறாத பட்சத்தில் அது தொடர்பாக சந்தித்து பேச முடியும். ஏனைய பொது விடயங்களில் ஆளுநரை சந்தித்து தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு ஆளுநர் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments:

Post a Comment