இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 February 2019

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்!


பாகிஸ்தான் எல்லையைக் கடந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான்.



கடந்த 14ம் திகதி இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 46 இந்திய இராணுவத்தினர் பலியாகியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடாத்தியதாக இந்தியா தெரிவித்திருந்தது. எனினும், நேற்றைய தினம் எல்லை கடந்த விமானங்களை விரட்டியடித்து விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் தாக்குதல் நடாத்தும் நோக்கில் எல்லை கடந்த இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் விமானியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் வெளியிட்டுள்ளமையும் தேவையேற்படின் பதிலடி கொடுக்கப்படும் என நேற்றைய தினம் பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment