இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் பன்றிக் கொழுப்பும் இதர எண்ணைகளும் கலந்திருப்பதாக தகவல் வெளியிட்டிருந்த பிரதியமைச்சர் புத்திக பதிரனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் கட்டாருக்கான இலங்கைத் தூதர் ஏ.எஸ்.பி. லியனகே.
கட்டாரில் இயங்கும் இலங்கை பாடசாலையிலிருந்து 'சலுகைகளை'ப் பெற்று வந்ததாக புத்திக மீது குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார் லியனகே.
முன்னரே தான் புத்திகவுக்கு எதிராக முறையிட முனைந்ததாகவும் அதனை ஜனாதிபதியே தடுத்திருந்ததாகவும் லியனகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment