புதிய அரசியலமைப்பின் நகல் கூட இன்னும் முழுமையடையாத நிலையில் நாட்டைப் பிரிக்கப் போவதாகக் கூறி எதற்காக குழப்பங்களை உருவாக்க வேண்டும் என கேள்வியெழுப்புகிறார் ரணில் விக்கிரமசிங்க.
அவரது கூற்றுப்படி, உத்தேச அரசியலமைப்பின் நகல் கூட இதுவரை உருவாகவில்லையென தெரிவிக்கப்படுகிறது. எனினும் இம்மாத முற்பகுதியில் குறித்த நகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என முன்னர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உத்தேச அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடிவிடும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே நகல் கூட இன்னும் தயாராகாத நிலையில் நாடு பிரிந்து விடும் என பிரச்சாரம் செய்வது கேலிக் கூத்து என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment