தமது கட்சியான பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் உருவான கூட்டுறவு சபைக்குத் தாமே தலைவராக இருப்பதாக தெரிவிக்கின்ற மஹிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேனவை தமது தரப்பு வேட்பாளராக நியமிக்கவில்லையென தெரிவிததுள்ளார்.
இதுவரை அவ்வாறு ஒரு எண்ணம் தமக்கு வரவில்லையெனவும் கூட்டு எதிர்க்கட்சி அவ்வாறு ஒரு முடிவை எட்டவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்ரிபால சிறிசேனவே நியமிக்கப்பட வேண்டும் என நேற்று அக்கட்சியின் அநுராதபுர மாவட்ட உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment