கட்டுநாயக்க: அவசரமாகத் தரையிறங்கிய எத்திஹாத் விமானம்! - sonakar.com

Post Top Ad

Friday, 8 February 2019

கட்டுநாயக்க: அவசரமாகத் தரையிறங்கிய எத்திஹாத் விமானம்!


பயணியொருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிட்னியிலிருந்து அபுதாபி சென்று கொண்டிருந்த எத்திஹாத் நிறுவனத்தின் ஏ380 விமானமொன்று இன்று காலை கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.



நோய்வாய்ப்பட்ட 29 வயது ருமேனிய பிரஜை அவசரமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அதேவேளை தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் மீண்டும் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து 97 லட்ச ரூபா பெறுமதியான எரிபொருளும் இதன் போது கொளவனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment