கட்டார்: கல்முனை பிரதேச கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் - sonakar.com

Post Top Ad

Saturday, 2 February 2019

கட்டார்: கல்முனை பிரதேச கழகங்களுக்கிடையிலான கிரிக்கட்


கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் (Gulf federation for Kalmunai) கத்தாரில் வசிக்கும் கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த விளையாட்டு கழகங்களுக்குக்கிடையிலான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்று (GFK Cricket Championship – 2019)  ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 

அதன்அங்கமாக இச்சுற்றுப்போட்டியின் தொடர்பான  அணிகளினது அறிமுக நிகழ்வு (Tournament introduction & Match draw) நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு  கத்தார்-அபூஹமூர் இல் அமைந்துள்ள  லக்விமா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகள் மற்றும் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஆலோசகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். 

இச்சுற்றுப்போட்டியானது எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாக இருப்பதுடன் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை Al Khour Sports Complex இல் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளமை  குறிப்பித்தக்கது.

-எம்.என்.எம்.அப்ராஸ்

No comments:

Post a Comment