பெரமுனவுக்குள் வலுக்கும் கம்மன்பில - பசில் முறுகல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 February 2019

பெரமுனவுக்குள் வலுக்கும் கம்மன்பில - பசில் முறுகல்!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சி தனித்துப் போட்டியிட்டு தேர்தலில் வெல்ல முடியாது என உதய கம்மன்பில கருத்து வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து பசில் ராஜபக்சவுக்கும் கம்மன்பிலவுக்குமான கருத்து மோதல் வலுத்து வருகிறது.



இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது 'முறைப்படி' செய்ய வேண்டும் என அது தொடர்பில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் கம்மன்பில கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து யாரும் விரும்பியபடி கட்சியை நடாத்திச் செல்ல முடியாது என பசில் ராஜபக்சவும், நாங்கள் மஹிந்தவால் தான் இங்கு இருக்கிறோம் உங்களால் இல்லையென கம்மன்பிலவும் பதிலளித்து தர்க்கம் முற்றியதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனித்துப் போட்டியிட்டால் நாடாளுமன்ற உறுப்பினராகிருக்க முடியாது என இதன் போது மஹிந்த ராஜபக்சவும் கம்மன்பிலவுக்கு சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, தமது கட்சி அத்தனை பலவீனமானதில்லையென கம்மன்பில பதிலளித்துள்ளதாக விமல் வீரவன்ச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment