பிராந்தியத்தைப் பொறுத்து சிங்களம் அல்லது தமிழில் மாத்திரமே பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வரும் வழமையை மாற்றி ஒரே பிறப்புச் சான்றிதழில் மும்மொழிகளும் உள்ளடங்கும் வகையில் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகத்துக்குத் தயாராகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது அரச பதிவாளர் திணைக்களம்.
அத்துடன் புதிய பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஆங்கில பிரத்யேக ஆங்கில மொழிபெயர்ப்பின் தேவையற்றுப் போவதோடு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment