தொடர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர.
இது தொடர்பில் சற்று முன்னர் சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் அவருடன் தொலைபேசியில் உரையாடியிருந்த நிலையில் சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போதும் இவ்வாறு அசௌகரியத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நலமாக இருக்கும் அதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை சென்று தயாசிறியை நலம் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment