இந்திய விமானங்களை 'விரட்டி விட்டோம்': பாகிஸ்தான் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 February 2019

இந்திய விமானங்களை 'விரட்டி விட்டோம்': பாகிஸ்தான்


அண்மையில் கஷ்மீர், புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 46 இராணுவத்தினர் பலியானதையடுத்து இன்றைய தினம் 1000 கிலோ குண்டுகளை தீவிரவாதிகள் முகாம் அமைந்திருக்கும் பாகிஸ்தான் பகுதியில் வீசியுள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.



எனினும், முசாபராபாத் பகுதிக்குள் வந்த இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விரட்டியடித்து விட்டதாகவும் வனப் பகுதிகளில் இந்திய விமானங்கள் அவசர அவசரமாக குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவிக்கிறது.

இரு நாடுகளும் அணு ஆயுத வல்லமையிருப்பதாக தெரிவிக்கின்ற அதேவேளை, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் வெளிப்படையான ஆட்சியின் கீழ், அந்நாடு முன்னேற்றகரமான ஜனநாயக பாதையில் பயணிக்கின்ற நிலையில் இரு நாட்டு முறுகல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள பாக். இராணுவ பேச்சாளர், மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், அவசரகமாகத் தப்பியோடிய இந்திய விமானங்களின் குண்டுகள் திறந்த வெளிகளில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment