கடந்த 10ம் திகதி பண்டாரவளையில் வைத்து பொலிஸ் ஊழியர் ஒருவரை தாக்கியதன் பின்னணியில் தேடப்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சட்டத்தரணியூடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணியில் சமிந்தவின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சபாநாயகரிடம் சமிந்தவை கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்று பொலிசார் தேடிவந்த நிலையில் இன்று அவர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment