ரஞ்சனின் 'கொகைன்' அறிக்கை ரணிலிடம் கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 25 February 2019

ரஞ்சனின் 'கொகைன்' அறிக்கை ரணிலிடம் கையளிப்பு


ரஞ்சன் ராமநாயக்கவினால் முன் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகைன் உபயோகிப்பதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் அக்கட்சியின் சார்பில் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான குழு விசாரணையொன்றை நடாத்தியிருந்தது.



இந்நிலையில், இவ்விசாரணை அறிக்கை இன்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அதன் பிரதியொன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக கிரியல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி மற்றும் மஹிந்த அணியைச் சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகைன் உபயோகிப்பதாக ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment