அண்மையில் தனமல்விலயில் வைத்து சுது ஹக்குரு சுமித் என அறியப்படும் வசந்த எனும் நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பின்னணியில் இரு சகோதரர்கள் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த கசுன் புத்திக, மனோஜ் புத்திக எனும் இரு சகோதரர்களும், கோட்டா என அறியப்படும் மேலும் ஒரு 27 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களால் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சுமித் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment