போதைப் பொருள் ராஜாக்கள் மங்களவின் மடியிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
டுபாயில் கைதான மாகந்துரோ மதுஷோடு ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் ஒருவரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் மங்கள சமரவீரவின் செயலாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
மங்கள சமரவீர அதனை மறுத்துள்ள போதிலும், அரசாங்கம் குறித்த நபரின் அடையாளத்தையும் அவருக்கு எவ்வாறு ராஜதந்திர கடவுச்சீட்டு கிடைக்கப்பெற்றது எனும் விபரத்தையும் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே டிலான் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment