தென் மாகாணத்தில் பாடசாலை அனுமதிகளுக்கு இலஞ்சம் பெறுவது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலை அதிபர்களும் சொத்துப் பிரகடனம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார் ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன்.
சில பாடசாலைகளில் மாணவர்கள் பதிவு செய்யப்படாமலேயே வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மாணவர்களை வகுப்பறைகளில் அனுமதிப்பதாகவும் தமக்குக் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் ஆளுனர், இதனை முறியடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
பாடசாலை அனுமதிக்கு லஞ்சம் பெறுவது சட்டப்படி குற்றம் என கல்வியமைச்சு அறிவித்தும் லஞ்சம் கேட்பது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment