மதுஷ் வெளிநாடு செல்ல உதவியதன் பின்னணியில் கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் சிவா எனும் நபரை விசேட அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர்.
இப்பின்னணியில் குறித்த நபரின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ள போதிலும் சந்தேக நபர் அங்கிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் மதுஷ், முக்கிய அரசியல்வாதியொருவரின் புதல்வர் திருமணத்திற்கு முஸ்லிம் பெயர் கொண்ட கடவுச்சீட்டில் வந்து சென்றதாகவும் நம்பப்படுகிறது. இதேவேளை, டுபாயில் வேறு பெயர் கொண்ட கடவுச்சீட்டிலேயே மதுஷ் தற்போது குடியிருந்ததாகவும் அண்மையில் அரச தரப்பு தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment