கடந்த வருடம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்தறுப்பு சைகை காட்டியதன் பின்னணியில் லண்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக அண்மையில் வெஸ்ட்மின்ஸ்டர் மஜிஸ்திரேட் பிடியாணை பிறப்பித்திருந்தது.
எனினும், இது பொதுவாய மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகத்தினூடாக ஆராயப்படாத நிலையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பென இலங்கைத் தூதரகம் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தினை ஏற்று பிடியாணையை இரத்து செய்து மீண்டும் வழக்கினை விசாரிக்க நீதிமன்றம் இணங்கியுள்ளது.
இப்பின்னணியில் மார்ச் 1ம் திகதி முழுமையான விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போது இலங்கையில் இருக்கும் பிரிகேடியரை நேற்றைய தினம் வழக்கில் இலங்கைத் தூதரகம் பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment