மதுஷின் சகா ஜங்காவின் வீட்டிலிருந்து நேற்றைய தினம் இராணுவ சீரூடைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஜங்காவின் உறவினரான இராணுவ சிப்பாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளாh.
கைப்பற்றப்பட்டிருந்த 18 சீருடைகளில் ஒன்றில் குறித்த சிப்பாயின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அநுராதபுர முகாமிலிருந்து கசுன் என அறியப்படும் குறித்த நபர் கைது செய்ய்பட்டுள்ளார்.
மதுஷ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment