ஐ.சி.சி விசாரணையின் போது உடனடியாக தனது ஐபோன் மற்றும் அத்துடனான சிம் கார்டினை ஒப்படைக்க மறுத்ததே தன் மீதான குற்றச்சாட்டு எனவும் அதனைத் தான் ஏற்றுக்கொண்டதன் விளைவிலேயே தனக்கெதிராக இரு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் சனத் ஜயசூரிய.
சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க நேரிட்டிருந்த போதிலும் வெளிச்சொல்ல முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக அதனைத் தான் செய்யவில்லையெனவும் அதன் பின்னணியில் தற்போது தனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள விளைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தான் எதுவித முறைகேடுகளிலோ அல்லது பந்தய நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லையெனவும் சனத் தெரிவித்துள்ளமையும் அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் சனத் ஜயசூரிய இரு வருடங்களுக்கு பங்கேற்க முடியாத வகையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment