சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 2019 பெப்ரவாரி 21 ஆம் திகதி வியாழக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.50 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அல் கப்ஜி இஸ்லாமிய நிலைய அழைப்பாளர் மவ்லவி றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் 'இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு' எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் எமது தஃவா நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் இஸ்லாமிய பாடத்திட்டத்திற்கான பரீட்ச்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
இந்நிகழ்சி முடிவில் மேற்படி உரையில் இருந்து கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண்இ பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: பெண்களுக்கு விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு எம். றிஸ்கான் முஸ்தீன் 00966555710452
-RK
No comments:
Post a Comment