நல்லாட்சி எனும் பெயரில் கூட்டாட்சியினர் பாரிய ஊழல்களை செய்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் பந்துல குணவர்தன, அண்மையில் இடம்பெற்ற டென்டர் மோசடியொன்று தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார்.
கெரவலபிட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ள LNG தளத்தினை 20 வருடங்களுக்கு அதிக விலை செலுத்த நேரிட்டும் கூட உள்நாட்டு நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் இது இலங்கை வரலாற்றில் மிக அற்புதமான ஒப்பந்தமாகக் கருதப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், முக்கிய கட்டுமானப் பணிகள் அனைத்தையும் சீன நிறுவனங்களுக்கு 'மோசடி' ஊடாக வழங்கி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment