லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் மீதான தாக்குதல், எக்னலிகொட கடத்தல் போன்ற எந்த சம்பவத்துக்கும் தான் தொடர்புபடவில்லையெனவும் அதை செய்தது வேறு இருவர் எனவும் தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
அக்கால கட்டத்தில் தானே பாதுகாப்பு செயலாளராக இருந்த போதிலும் யுத்தத்திலேயே தனது முழுக் கவனமும் இருந்ததாகவும் அதனை திசை திருப்ப விரும்பியிருக்கவில்லையெனவும் கோத்தா மேலும் தெரிவித்துள்ளார்.
தான் பெயர்களை வெளியிட விரும்பவில்லையாயினும், சம்பவத்தையடுத்து அதற்கு சரத் பொன்சேகாவே பொறுப்பென ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாகவும் எனினும் 2010 தேர்தலில் இரு தரப்பும் கை கோர்த்த பின்னர் அதைப்பற்றி பேசுவதை ரணில் தவிர்த்து விட்டதாகவும் தன் மீது பழி சுமத்தப்படுவதாகவும் கோத்தா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment