பாதாள உலக பேர்வழி மதுஷின் கைதுக்கு உரிமை கொண்டாடுவதில் ஏகப்பட்ட போட்டி நிலவுவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
டுபாயில் கைதான நபருக்கு பல வருடங்களாக வலை விரித்து வீழ்த்த வைத்ததாகவும் பத்திரிகைகளுக்கு கருத்து வெளியிடப்படுவதாகவும் தற்சமயம் எல்லோரும் உரிமை கொண்டாடப் போட்டியிடுவதாகவும் பொலன்நறுவயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து விசனம் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி.
மதுஷ் கைது செய்யப்பட்டதில் ஸ்ரீலங்கா பொலிசுக்கு பங்கிருப்பதாகவும் இரு பொலிஸ் உளவாளிகளே டுபாய் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment