இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கூடுதல் வாக்குகளைப் பெற்று காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவாகியுள்ள அதேவேளை தனது ஆரம்ப காலத்திலிருந்து சட்டத்தரணிகள் சங்க செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு வந்த இந்ததிஸ்ஸ, கனிஷ்ட சட்டத்தரணிகளின் குழுவின் செயற்படுத்துனராகவும் 1988, 1989 காலப்பகுதியில் அதன் தவைராக 1989, 1997-98, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவராவார்.
அத்துடன் 1991ல் கொழும்பு சட்டத்தரணிகள் சங்க இதழாசிரியராகவும் அக்குழுவின் உறுப்பினராகவும் 1990-1993 காலப்பகுதிகளிலும் பதவிவகித்தார். இலங்கைச் சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழுவில் 1991,1994-1997 மற்றும் 2001ம் ஆண்டு காலப்பகுயில் உறுப்பினராக இருந்ததுடன் ஆசியர் சட்ட இளைஞர் சட்டத்தரணிகள் குழுவின் தலைவராகவும் 1993ம் ஆண்டு ஆசிய சட்டக் குழுமத்தின் உறுப்பினராகவும் 2002-2003ம் ஆண்டு காலப்பகுதிகளில் செயற்பட்டதோடு. இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக 2002-2003 காலப்பகுதிகளில் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment