தனது சகோதரரான ஜனாதிபதியை 'நாய்' என பகிரங்கமாக திட்டியவர்களின் குட்டு விரைவில் வெளிவரும் என்கிறார் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன.
டுபாயின் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷிடம் அந்நாட்டின் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையில் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் எதுவித உடன்படிக்கையும் இல்லாததல் மதுஷ் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் சாத்தியமில்லாத நிலையே காணப்படுகிறது.
இந்நிலையிலேயே, டுபாயிலேயே மதுஷிடம் விசாரணை நடாத்த முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மதுஷ் ஊடாக பல அரசியல்வாதிகளின் பின்னணிகள் மற்றும் விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் கைதான வெலே சுதா இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட போதும் இவ்வாறே எதிர்பார்ப்பு நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment