நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் ரணில் - மஹிந்த - மைத்ரி உடன்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ரவி கருணாநாயக்க.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக பல வருடங்களாக வாக்குறுதியளிக்கப்பட்டு வந்த நிலையில், தான் அதை நிச்சயம் நீக்கப் போவதாகக் கூறி, 19ம் திருத்தச் சட்டத்துக்கும் ஒப்புதல் அளித்திருந்தார் தற்போதைய ஜனாதிபதி. எனினும், கடந்த ஒக்டோபரில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் பிரளயம் ஒன்றை உருவாக்கியிருந்த அதேவேளை, நீதிமன்ற தலையீட்டில் பிரதமர் மாற்றம் சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகாரம் பற்றி இலங்கையில் அடிக்கடி பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment