புதிய கட்சியொன்றை உருவாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
செய்தியாளர் இது பற்றி வினவிய போது பதிலளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது புதிய கட்சிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மஹிந்த ராஜபக்சவுக்குத் தான் வாய்ப்பளித்திருந்த போதிலும் பின்னர் தன்னைப் புறக்கணித்து அவமானப்படுத்தியதாக சந்திரிக்கா பிற்காலத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டு வந்ததுடன் மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை பதவிக்கு வராமல் தடுப்பதில் மும்முரமாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment