மாகந்துரே மதுஷை தூக்கிலிடும் அடிப்படையில் இலங்கையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு பதவிக்குத் தான் தயாராக இருப்பதாக பொலிஸ் உளவாளி நாமல் குமார அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க பிரஜையொருவரும் இலங்கையில் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், உள்நாட்டவரிடமிருந்து மாத்திரமே தாம் விண்ணப்பங்கள் எதிர்பார்ப்பதாகவும் மின்னஞ்சலில் வந்த குறித்த அமெரிக்க பிரஜையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment