ஒலிம்பிக் தொடர்புபட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கான இந்தியாவின் அனைத்து விண்ணப்பங்களையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஏனைய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகளும் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது இடம்பெறும் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க, இரு பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இச்சர்ச்சை உருவாகியுள்ளது.
அண்மையில் காஷ்மீரில் இடம்பெற்ற பாரிய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் பலியாகியிருந்தனர். இப்பின்னணியில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு சீர் குலைந்துள்ளது. எனினும் சர்வதேச போட்டியெனும் அடிப்படையில் ஏனைய நாட்டினருக்கு விசா வழங்குவது சம்பிரதாயபூர்வமாக பின்பற்றப்படும் நடைமுறையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment