தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசல் நிர்வாக சபை, கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபை இணைந்து நடத்தும் தேசிய சுதந்திர தின வைபவம், பெப் 4ம் திகதி மு. ப. 10. மணிக்கு கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, அரசாங்க உயர் அதிகாரிகள், பொலிஸ், மற்றும் இராணுவ படை உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment