கொழும்பு 10, அல்ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Back to School நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாபெரும் நிகழ்வில் இதுவரை காலமும் அல்ஹிதாயா கல்லூரியில் ஆசிரியர்களாக, அதிபர்களாக பணி புரிந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கல்லூரியில் கற்ற பழைய மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, கொழும்பு 10, அல்ஹிதாயா கல்லூரியுடன் இது வரை காலமும் தொடர்புபட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென ஏற்பாட்டுக் குழு எதிர்பார்க்கிறது. அவர்கள் அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஸாத் காதர் (0777573257), நிகழ்வின் திட்டக் குழுத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஸீ. இல்ஹாம் ஹனீப் (0773945566) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஸீ. பஹார்தீன் தெரிவித்துள்ளார்.
-Jemsith Azeez
-Jemsith Azeez
No comments:
Post a Comment