கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் 91 ஆவது ஆண்டு நிறைவும் இன்று வெள்ளிக் கிழமை கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் சலீம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு ஒரு வருடத்தை கடந்த நிலையில் இதுவே முதற் தடவை தேசிய பாடசாலைக்கான இல்ல விளையாட்டுப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின் போது பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடன் பெரும் அமோக வரவேற்பளித்தார்கள்.
எந்தூரியம் இல்லம் முதலிடத்தைப் பெற்றது. மொத்தமாக நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தது
குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.பீ.மசூத் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
-
No comments:
Post a Comment