7 லட்சம் பெறுமதியான 5000 ரூபா நோட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 February 2019

7 லட்சம் பெறுமதியான 5000 ரூபா நோட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது!


தமிழ்நாடு, மதுரையிலிருந்து இலங்கை வந்தடைந்த இந்திய பிரஜையொருவர், தமது பயணப் பொதிக்குள் ஏழு லட்ச ரூபா பெறுமதியான 5000 ரூபா இலங்கை நாணயத் தாள்கள் வைத்திருந்ததன் பின்னணியில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த நபர் தம்மிடம் பணம் இருப்பதை தெரியப்படுத்தாது, அதனை பொதியில் வைத்திருந்ததாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை - இந்தியா இடையே சிறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் 37 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment