அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தினை அம்பாறை மாவட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக பிரதேச செயலகம் தோறும் வீடுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான காணிக் கச்சேரி நேர்முகத் தேர்வு இடம்பெற்று வருகின்றன.
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இந்நுரைச்சோலை வீடுகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (22) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நேர்வுகத் தேர்வுக்கு அம்பாறை மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் திருமதி ஏ.எல்.ஐ.பானு, மாவட்ட காணி உத்தியோகத்தர் எம்.கே.எம்.முசம்மில், சாய்ந்தமருது பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஜே.ஏ.ஹஸ்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.சுதா, எம்.ஜெய்சங்கர், முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.ஹம்சார் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சவூதி அரசினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தினை பெற்றுக்கொள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 660 பேர் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
-றியாத் ஏ. மஜீத்
-றியாத் ஏ. மஜீத்
No comments:
Post a Comment