இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறு குற்றச்செயல்களின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வந்த 525 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஞானசாரவின் விடுதலை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதேவேளை குறித்த விவகாரம் பகிரங்கமானதையடுத்து எதிர்ப்புகளும் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இந்நிலையில், இன்று ஞானசார விடுவிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment