தினசரி பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வரும் தொடர்ச்சியில் இன்று பேலியகொட பகுதியில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
2009 யுத்த நிறைவின் பின்னர் இலங்கை போதைப்பொருள் வர்த்தக மையமாக மாறி விட்டதாக அண்மையில் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், தினசரி பெருந்தொகை போதைப் பொருள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மறுபுறத்தில் போதைப் பொருள் ஒழிப்பின் அடிப்படையில் மரண தண்டனையை அமுல் படுத்த வேண்டும் என ஜனாதிபதி அடிக்கடி 'கருத்து' வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment